சென்னை : சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த ரமா என்ற அறுப்பு ரமா (49), என்ற பெண், 16 கிலோ கஞ்சாவுடன் எம்.கே.பி. நகர் காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்தநிலையில் சென்னை காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் பெண் கஞ்சா வியாபாரி அறுப்பு ரமா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று கொலை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களில் சிக்கிய 20 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில், அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இந்த ஆண்டு இதுவரையில் 244 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.