இந்திய அரசு 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.
விருதுகள் அனைத்திந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
காவல் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள்
இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள், தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த மூன்று காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
திரு. அபய் குமார் சிங், ஐபிஎஸ் ,கூடுதல் காவல் துறை இயக்குனர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.
-
திரு. சைலேஷ் குமார் யாதவ், ஐபிஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குனர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சென்னை.
-
திரு. பே.கு.பெத்து விஜயன், காவல் கண்காணிப்பாளர் II, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு, சென்னை.
இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள்
இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள், தமிழ்நாடு காவல் துறையை சார்ந்த 21 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்,
-
சேலம் மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில் குமார், ஐபிஎஸ்.
-
சென்னை, பெருநகர காவல் போக்குவரத்து(தெற்கு), காவல் துணை ஆணையாளர் திரு.நா.ம. மயில்வாகனன். ஐபிஎஸ்.
-
சென்னை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் கண்காணிப்பாளர், திருமதி. ராஜேஸ்வரி, ஐபிஎஸ்.
-
சென்னை, பெருநகர காவல் புனித தோமையார் மலை, ஆயுதப்படை 2, காவல் துணை ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன்
-
சென்னை, பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு.வசந்தன்
-
நாகர்கோயில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல்துறை கண்காணிப்பாளர், திரு மதியழகன்
-
திருநெல்வேலி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு.அனில் குமார்
-
திருப்பூர், மாநகர குற்றப்பிரிவு, காவல் உதவி ஆணையாளர், திரு .சுந்தரராஜ்
-
சென்னை, தலைமை இடம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு .ராமதாஸ்
-
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை 1 காவல் துணை ஆணையாளர் திரு. சௌந்தர்ராஜன்
-
கோயம்புத்தூர், உட்கோட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு. நா. ரவிக்குமார்
-
சென்னை பெருநகரக் காவல் புனித தோமையார் மலை, போக்குவரத்து அமலாக்கப்பிரிவு, காவல் உதவி ஆணையர், திரு. அன்வர் பாஷா
-
நாகப்பட்டினம், ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல் ஆய்வாளர், திரு. ரமேஷ் குமார்
-
சென்னை, பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, காவல் ஆய்வாளர், திரு .நந்தகுமார்
-
ஈரோடு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல் ஆய்வாளர், திரு .மு .நடராஜன்
-
தூத்துக்குடி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் ஆய்வாளர், திரு. திருப்பதி
-
சென்னை, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு. மணி வேலு
-
சென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு. ஜெயச்சந்திரன்
-
சென்னை, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு. டேவிட்
-
சென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு.ஜே. பி .சிவக்குமார்
-
சென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு.சந்திரசேகரன்