திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்டம், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை போக்குவரத்து மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாசுகி அவர்கள் சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசினார். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு குழந்தை உரிமைகள், பாதுகாப்பு ,குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்,சைல்டு லைன் கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் வரவேற்று பேசினார் .விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 500 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி