திண்டுக்கல் : பழனி உட்கோட்ட காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான கண் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் தலைமையாக பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் காவல் ஆய்வாளர்கள், காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் கண் மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பஸ், கார், ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தங்களது கண்களையும், ரத்த உயரழுத்த பரிசோதனையும் செய்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா