மதுரை : மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு பயிற்சியினர் மற்றும் மதுரை சமூகவியல் துறையினருடன் இணைந்து நேற்று (14.12.2019) மதுரை மாநகர் கிரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக இலவச முழு உடல் பரிசோதனையும் மற்றும் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக இலவச கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.பாஸ்கரன் அவர்கள், அண்ணாநகர் சரகம் (ச&ஒ) உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள், சமூகவியல் துறை தலைவர் திருமதி.மீனாகுமாரி மற்றும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இந்த பரிசோதனை முகாமில் 56 காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை