திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வீதிவிடங்கன் டாஸ்மார்க் கடையின் மேற்பார்வையாளர் திரு.தெட்சிணாமூர்த்தி, என்பவர் டாஸ்மார்க் கடையின், இரண்டு நாள் விற்பனை தொகையான ரூ 8,54,470/- யை நன்னிலம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் செலுத்த அவரது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற போது ஸ்ரீவாஞ்சியம் நேரு நகர், மாணிக்க நாச்சியார் கோவில் மதகடி அருகில் மர்ம நபர்கள் தெட்சிணாமூர்த்தியை வழிமறித்து அருவாளால் தாக்கி அவரிடமிருந்த ரூ 8,54,470/- முழுதோகையையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக நன்னிலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த சேவாக் த/பெ சஞ்சய்காந்தி, ரமேஷ்,த/பெ ரவிச்சந்திரன், அரவிந்தன் த/பெ அண்ணாதுரை அருள்ஜீவா த/பெ ராமன் மற்றும் இவர்களின் நெருங்கிய கூட்டாளியான பண்டிச்சேரியை சேர்ந்த இளையராஜா த/பெ பிரபாகரன் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் த/பெ முருகன் ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் (08.03.2023) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பராட்டினார்கள்.