தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநல்லூரை சேர்ந்த குருமூர்த்தி மகன் ரமேஷ்பாபு வயது (43) என்பவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக கடத்தப் பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து இக்குற்றச் செயலில் ஈடுபட்ட நபரை உடனே பிடிக்கவும் , கடத்தப்பட்ட நபரை மீட்கவும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ், அவர்கள் உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன் அவர்களின் மேற்பார்வையில் சுவாமிமலை காவல்நிலைய காவல்ஆய்வாளர் சிவசெந்தில் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார் தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம் செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள் இதன் அடிப்படையில் கிடைத்த தகவலின்படி இந்த ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபர் பாபநாசம் அருகே உத்தமதானியை சேர்ந்த ராமலிங்கம் மகன் உத்திராபதி வயது (25) என்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து அந்நபரை கைது செய்து கடத்தப்பட்ட ரமேஷ்பாபுவை மீட்டார்கள், இவ்வழக்கை விரைவாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்