மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த (08.06.23)-ம் தேதி மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்தில் உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த (50) வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடமிருந்து 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1 அலைபேசியை கொள்ளையடித்து சென்றுவிட்டார். மேற்படி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சந்திரசேகர் அவர்களின் மேற்பார்வையில், சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் திரு.மோகன் மற்றும்மாவட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.குமரகுரு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டது.
மேற்படி குற்றச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் தனிப்படையினர் சென்னை, திருமுல்லைவாயில் பகுதியில் பதுங்கியிருந்த, குற்றவாளி ராஜேஸ்கண்ணன்,வயது 27/23, த/பெ. போஸ், க.எண்:3, சூரணம், இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களான4 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1 அலைபேசியை கைப்பற்றியுள்ளனர். மேற்படி குற்றவாளி மீது இது போன்று பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. சில குற்றவழக்குகளில் இவர் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் குற்றச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்