திருச்சி: திருச்சி மாவட்டம், 14.02.2022 அன்று திருவெரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் உமாமகேஸ்வரி என்பவர் காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியிருக்கிறார்.
வீட்டை திறந்தவுடன் அவர் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக உமா மகேஸ்வரி என்பவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அளித்ததன் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் அவர்களின் உத்தரவின் படி, திருவெரும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன் தலைமையில், தலைமைக் காவலர்கள் திரு ஹரிஹரன், அருண்மொழிவர்மன், இன்ப மணி, விஜயகுமார் முதல் நிலை காவலர் திரு. நல்லேந்திரன், ராஜேஷ், குணா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
வழக்கு பதிவாகி 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து நகைகளை மீட்டு சிறையில் அடைத்தனர்.