கோவை: .கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், பேரூா், கிணத்துக்கடவு, துடியலூா், செல்வபுரம், சிறுமுகை, சூலூா், மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.இந்த சோதனையில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து 445 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.இதேபோல மாநகர பகுதியான வேலாண்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக ஒருவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்