திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் (19.01.2020 )நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் “FIT INDIA” என்ற உடலை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் இணைந்த பேரணியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பேரணியை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் திண்டுக்கல் நகர் பகுதியில் சென்று சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா