திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில் கடந்த காலங்களில் நடந்துள்ள கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிக்க, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையாளர் திரு.மகேஷ்குமார் (இ.கா.ப) (குற்றம் மற்றும் போக்குவரத்து) அவர்களின் தீவிர நடவடிக்கையில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் 08-01-2020-ம் தேதியன்று, பாளை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சமி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.சேவியர் அவர்கள் ரோந்து பணியின் போது, நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் காவல் துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்ற போது, ரோந்து பணியில் இருந்த காவல் துறையினர் கொள்ளை கும்பலை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் நான்கு பேரும் திருப்பூர் பகுதியை சேர்ந்த ராமஜெயம், குருவி (எ) குருசக்தி, முகமது ரபீக், யாசர் அராபத் என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் கொள்ளையடித்து மறைத்து வைத்திருந்த 52 சவரன் தங்க நகைகள் மற்றும் 8.5 லட்சம் ரொக்க பணம் மீட்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடித்து நகைகளை மீட்ட காவல் துறையினரை 10-01-2020-ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு. தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி