நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திட்டச்சேரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.