சென்னை : ஐஸ்அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கைது செய்ய உதவிய மோப்பநாய் பயிற்சி காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, இராயப்பேட்டை, அகத்தி முத்தன் தெருவில் வசித்து வரும் கார்த்திக், (25) என்பவர் கடந்த 20.12.2019 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மேற்படி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றவர் பின்னர் வந்து பார்த்தபோது, யாரோ வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.5,000/-ஐ திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து ஐஸ் அவுஸ் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.
மோப்ப நாய் பயிற்சியாளர்/காவலர் திரு.S.பிரபாகரன்(கா.46305), மோப்ப நாய் அர்ஜுனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று வீட்டினுள் விட்டபோது, மோப்ப நாய் அர்ஜீன் வீட்டின் படிக்கட்டு மேல் ஏறி பின்பு வெளியே வந்து அருகில் இன்னொரு வீட்டின் அருகில் நின்றது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் மோப்பநாய் அர்ஜுன் கடைசியாக வந்து நின்ற வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி சதீஷ்குமார்,(24) என்பவரை கடந்த 20.12.2019 இரவு சுமார் 11.30 மணியளவில் அவரது வீட்டில் கைது செய்து, அவரிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள் மற்றும்ரொக்கம் ரூ.5,000/- பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்ப டி சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றவாளியை பிடிக்க உதவிய மோப்பநாய் படை பிரிவு காவலர் திரு.S.பிரபாகரனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 26.12.2019 நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை