இராமநாதபுரம்: இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திரு.சதீஷ் தலைமையில் வனவர் திரு சந்துரு ராஜா, வனக்காப்பாளர் திரு.ஜோசப், வனக் காவலர் திரு செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் உப்பூருக்கு அருகில் உள்ள வளமாவூர் கண்மாய் பகுதியில் ரோந்து பணி இருந்த போது, நான்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில், இருந்த ஐந்து நபர்கள் வனத்துறையினரை, பார்த்து தப்பிக்க முயன்றபோது, அவர்களை கையும் களவுமாக பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகள் 3 எண்ணம் உயிருடனும் ஒரு எண்ணம் இறந்த நிலையிலும் மற்றும் சிறிய வலைகளும் கைப்பற்றப்பட்டது. பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சேர்ந்த M.மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த M.ஆறுமுகம், கி.ஆறுமுகம், மா. முத்து, க.ஆறுமுகம் மற்றும் பிடிபொருட்களையும் வனத்துறையினர் ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருடன் உள்ள நீல சிறவி பறவைகள் தேர்தங்கல் சரணாலயத்தில் பாதுகாப்பாக விடப்படும். எதிரிகளுக்கு வன உயிரின காப்பாளர் திரு.அசோக்குமார் இ. வ. ப அவர்களால் அபராத தொகை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு
நீலச்சிறவி பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் வாழ்விடமாக கொண்டவை. நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெளிநாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக பறந்து செல்கின்றன. இந்தியா பங்களாதேஷ் மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இவை செல்கின்றன. ராமநாதபுரத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் ஒவ்வொரு வருடமும் வலசை வருகின்றன. மிகவும் அழகான அரிய வகை பறவை என்பது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்