விருதுநகர் : விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிஷேக் என்டர்பிரைசஸ் யூனிட் கம்பெனியில் பணி செய்யும், பெண் தொழிலாளர்களுக்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் திருமதி. நவமணி, பெண் முதல்நிலைக் காவலர் திருமதி. மாதாசிலோன்மணி, பெண் காவலர்கள் திருமதி. ஸ்ரீதேவி மற்றும் திருமதி. முருகேஸ்வரி ஆகியோர்,
பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவும் வகையில் காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை எடுத்துரைத்த தோடு காவலன் SOS செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தனர்.