திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார்,இ.கா.ப.,அவர்கள் அளித்த இரகசிய தகவலின் பேரில், செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.E.செந்தில் அவர்களின் மேற்பார்வையில், தூசி வட்ட காவல் ஆய்வாளர் திரு.A.அண்ணாதுரை அவர்களின் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் மற்றும் காவலர்கள் அப்துல்லாபுரம் காவல்துறை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது,
அவ்வழியே காஞ்சிபுரம் to செய்யாறு நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த TN25 BM 4975 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது.
வாகனத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 07 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த காவலர்கள், குட்காவை கடத்தி வந்த மனோஜ் 24 மாமல்லன் நகர், காஞ்சிபுரம் மற்றும் விக்னேஷ் 30 ,, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
மேலும், மனோஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் விரைந்த தனிப்படையினர் காஞ்சிபுரம், விளக்கடி கோயில் தெருவை சேர்ந்த, செல்வராஜ் 37 , என்பவரின் வீட்டினிடம் சோதனை மேற்கொண்டதில், வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 93 கிலோ குட்கா பொருட்களை கண்டுபிடித்த காவலர்கள், குற்றவாளி செல்வராஜை கைது செய்து, மூன்று குற்றவாளிகளிடமிருந்தும் மொத்தமாக சுமார் 2,16000/- ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ குட்காவை மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள், தூசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் மூன்று பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.