கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சியை தக்கலை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
காவலர்கள் தங்களது பணியின் தன்மையாலும், மன அழுத்ததாலும் பாதிக்கப்படுவது இயற்கை. காவலர்கள் தங்கள் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அவர்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காவல்துறையினர் மன நிறைவுடன் பணியாற்ற முடியும். காவல் துறையினரின் மனநலன், குடும்ப நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மன அழுத்ததை குறைத்து புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திலகன்
கன்னியாகுமரி