சென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், மற்றும் உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக 2 ஸ்கோச் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது.
விருதுகள் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் காவல்துறை இயக்குனர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள் இதற்கு ஆதரவு மற்றும் ஊக்கத்தை அளித்த தமிழக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.திரிபாதி, IPS அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்கள் 1993 ஆம் ஆண்டு அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த போது துவக்கப்பட்து. இதில் மாவட்டம் தோறும் உள்ள இளைஞர்கள, தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலைய காவல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவர். அப்பகுதி இளைஞர்கள் கொண்டு, குற்றவாளிகளை எளிதாக அணுக முடிந்தது. இவ்வமைப்பானது தமிழகத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழகம் மட்டும் அல்லாது, உலகலாவிய பெரும் வரவேற்ப்பை பெற்றது. அவ்வமைப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் காவல்துறை இயக்குனர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஸ்கோச் விருதுகள்
காவல்துறை இயக்குநர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் ஸ்கோச் விருதுகள் பெறுகிறார். இந்த விருது சாதனையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது. இந்த விருது நியமனம், நடுவர் மன்ற விளக்கக்காட்சி மதிப்பீடு அதைத் தொடர்ந்து இணையவழி வாக்களிப்பு போன்ற கடுமையான செய்முறை விளக்கத்திற்குப் பிறகு வழங்கப்படுகிறது.
காவல்துறை இயக்குனர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள், காவல் துறை நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த காவல் விருதுக்காக உங்கள் குற்றவாளியை தெரிந்துகொள்ளுங்கள் என்ற 2 பிரிவுகளின் கீழ் தனது அறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பித்தார் .
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘உங்கள் குற்றவாளியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ கருத்தாக்கம் ‘காவல்துறை நண்பர்கள்’, ‘பொது விநியோகத் திட்டம்’ தொடர்புடைய நபர்களின் உதவி மற்றும் சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவரங்கள் வாயிலாக 80 சதவீத அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபடும் 20 சதவீத தீவிரக் குற்றவாளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்கள் அவர்கள் நம் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆங்கில இணைய தின மின்னிதழை கடந்த 2013 ஆண்டு துவக்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.