திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவில் குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
காவலர் சேமநல நிதியிலிருந்து 21 நபர்களுக்கு எஸ்.பி.திரு.ஸ்ரீனிவாசன் பெற்று அவர்களை நேரடியாக அலுவலகம் அழைத்து வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது :
உங்கள் மருத்துவ தேவைகளை உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எங்களால் முடிந்த உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீஸ் துறை சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகளை போலீசார் செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை பின்பற்ற வேண்டும், என்றார்.
திரு.அழகுராஜா