திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் தடுக்கும் பொருட்டு கடந்த 11.10.2020 அன்று கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி சிங்காரத்தோப்பு, மேலபுலிவார்ரோடு ஜங்ஷனில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது TN48 AV 8762, Hero Glamour என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்ததில் அந்த நபர் ராஜ்குமார், வயது (51) என்றும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண்.1450/20, u/s. 379 IPC-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனம் எனவும் தெரிய வரவே, அவரை மேலும் விசாரணை செய்ததில் தான் அந்த வாகனத்தை திருடியதை ஒத்துக் கொண்டும், தான் இது வரை திருச்சி மாநகரம் கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களிலும் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடங்களிலும் சுமார் ரு.40,00,000/-(ரூபாய் நாற்பது இலட்சம்) மதிப்புள்ள பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகளில் காணாமல் போன 77 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்பு கொண்டார். அவரை கைது செய்து அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில், அவர் திருடி மறைத்து வைத்திருந்த 77 இருசக்கர வாகனங்களை அடையாளம் காட்டி ஆஜர் செய்ததை கைப்பற்றியும் எதிரியை கடந்த 11.10.2020 அன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்படி எதிரி தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன், இ.கா.ப. அவர்கள் மேற்படி எதிரி ராஜ்குமார் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று 24.12.2020 எதிரி ராஜ்குமார் என்பவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விவரம்.
01. TN58AQ3388-Royal Enfield
02. TN48AF2529-Royal Enfield
03. TN42T6070-Royal Enfield
04. TN69 1276-Yamaha
05.TN18A9331-Yamaha
06.TN49BK0877-Yamaha
07.TN22CH4087-YamahaFZ
08.TN21AR2155-Yamaha-R15
09.TN45BT9842-Yamaha R15
10.TN81D3036-Bajaj Pulsar
11.TN45BQ9793-Bajaj Pulsar
12.TN55AJ5353-Bajaj Pulsar
13.TN81X0455-KTM-Duke
14.TN21AS1433-KTM-Duke
15.TN91B0126-Tvs Apache
16.TN49BK0877-Honda-Rnet
17.TN81C2667-sp+
18.TN48R6788-sp-pro
19.TN55AL4233-sp-pro
20.TN55AU7524-Starcity
21.Honda Dio-Chassis no. MEAJF393EF7010126.