மதுரை : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப, அவர்களின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் கடந்த (01.05.2023) முதல் கஞ்சா வேட்டை 4.0 என்ற தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், துணை ஆணையர் வடக்கு அவர்களின் மேற்பார்வையின்படி, மதுரை மாநகரில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகர் சி-3 எஸ்.எஸ்.காலணி காவல்நிலையம் மற்றும் பிற காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த ராஜ்குமார் மற்றும் ஜெ.கே என்ற ஜெயக்குமார் ஆகியோர்களை தேடி வந்த நிலையில், (09.05.2023),-ம் தேதி B4 கீரைத்துறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.கருப்பசாமி என்பவரது தலைமையிலான தனிப்படையினருக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி, மதுரை ரிங் ரோடு ஹானா ஜோசப் மருத்துவமனை எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த TN 85 E 8763 Suzuki Baleno காரினை நிறுத்தி சோதனை செய்த போது, அக்காரில் பின்புறம் டிக்கியில் 40 கிலோ கஞ்சா வைத்திருப்பது கண்டறியப்பட்டு, மேற்படி கஞ்சாவை கைப்பற்றி, அக்காரின் ஓட்டுநரை விசாரிக்க போது, அவரது பெயர் ராஜ்குமார் (33) H-3 TNHB Colony, எல்லீஸ் நகர், மதுரை என்று தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில், தனது கூட்டாளிகளான ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 1. சுகுமாறன், தூத்துக்குடியை சேர்ந்த 2. ராஜா, 3. சுடலைமணி, 4. மகேஸ்குமார் மற்றும் 5. முத்துராஜ் ஆகியோருடன் மதுரை புதூரை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி போலியான TN 59 AW 1575-என்ற பதிவெண்ணை கொண்ட Eicher (Close Type) வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்து, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் என்ற கிராமத்தில் மேற்படி ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மேற்படி காரையும், Mobile phone-3 மற்றும் Jio Modem-1 ஆகியவை கைப்பற்றப்பட்டு B4 கீரைத்துறை காவல்நிலைய குற்ற எண் : 374/23 u/s 8(c) r/w 20 (b) (ii) (C), 25, 29 (1) NDPS Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்பு (10.05.2023) கீரைத்துறை காவல் ஆய்வாளர் திரு.பெத்துராஜ் அவர்கள் இவ்வழக்கினை மேல் விசாரணைக்கு எடுத்து கொண்டு, தனிப்படையினருடன் மேற்படி குற்றவாளி கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் கிராமம், ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்று, அங்கு நின்று கொண்டிருந்த TN 72 BP 6115 Bolero Pick-Up வாகனத்தை சோதனை செய்து, அந்த வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் இருந்த 2000 கிலோ கஞ்சா கைப்பற்றியும், அப்போது அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த 1. சுகுமாறன் 27/23 த/பெ கண்ணன், ஜீவா நகர் 2வது தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை 2. ராஜா (33)386, ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி, 3. சுடலைமணி (21), 24/59, மில்லர்புரம், மேற்கு தெரு, தூத்துக்குடி, 4. மகேஸ்குமார் (29), 33-A/1 5வது தெரு, அண்ணாநகர், தூத்துக்குடி மற்றும் 5. முத்துராஜ் (26), 59, மில்லர்புரம், மேற்கு 2வது தெரு, தூத்துக்குடி ஆகியோர்களை கைது செய்து விசாரித்த போது, அவர்கள் மதுரையை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலமாக ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, தூத்துக்குடி ஆரோன் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்தனர். கஞ்சா ஏற்றி வைத்திருந்த TN 72 BP 6115 Bolero Pick-Up, Mobile phone-5 மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ-25,000/- ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. பின்பு மேற்படி சுகுமாறனிடம் ஆந்திராவில் இருந்து TN 59 AW 1575-என்ற போலியான Number Plate-யை பயன்படுத்தி கஞ்சா ஏற்றி வந்த Eicher வாகனத்தை பற்றி விசாரிக்க, அவ்வாகனத்தை மதுரை கோச்சடை முத்தையா கோவில் அருகில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தை அடுத்து, அங்கு சென்று மேற்படி Eicher வாகனத்தையும், அதில் மறைத்து வைத்திருந்த 50 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றினர். இவ்வழக்கில் மேற்படி 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், மொத்தம் 2090 கிலோ கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய Eicher lorry – 1, Car – 1, Bolero Pick-Up – 1, Mobile Phone – 8, Jio Modem-1 மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ-25,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெ.கே என்ற ஜெயக்குமார் மற்றும் ஆரோன் ஆகிய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரு.விஜயராஜ்