திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்ட்ரோடு புதூர் பகுதியில் வசிப்பவர் கவிதா (30). இவர் கடந்த 01.09.19ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக சென்றுவிட்ட நிலையில் மீண்டும் 07.09.19ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்க்கும்பொழுது கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 பவுன் செயின் காணாமல் போயிருந்தது, இதுகுறித்து அவர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரினை பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் திரு மகேஷ் அவர்கள் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வீரபாண்டியன், திரு.நல்லதம்பி,HC- 737 திரு.ஜார்ஜ் எட்வர்ட், HC-1695 திரு.ராதாகிருஷ்ணன், HC- 786 திரு.முகமது அலி மற்றும் Gr.I -755 திரு. விஸ்வாசம் ஜெயராஜ் ஆகியோர் கொண்ட குற்றத்தடுப்பு போலீசாரும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடையவன் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்து விரைந்து சென்ற குற்றத்தடுப்பு போலீசார் அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வீட்டை உடைத்து திருடியது தஞ்சாவூரை சேர்ந்த முகமது உசேன் (26) என்பதும் இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 7 பவுன் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.