அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K. பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி கொடி அணிவகுப்பை (14.02.2022) இன்று அரியலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேனி அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.
ஒற்றுமைதிடலில் தொடங்கிய கொடி அணிவகுப்பு மாதா கோவில் தெரு, அண்ணாசிலை,செந்துறை ரோடு, ராஜாஜி நகர், பெரிய கடைதெரு,சத்திரம், தேரடி வழியாக சென்று அண்ணாசிலையில் முடிவுற்றது.
கொடி அணிவகுப்பு அரியலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் (தலைமையகம்) அவர்கள், அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணவாளன், அவர்கள் மற்றும் அரியலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.அலாவுதீன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.பத்மநாதன் ஆகியோர் கொடி அணிவகுப்பை வழிநடத்திச் சென்றனர்.
இந்தக் கொடி அணிவகுப்பில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பதட்டமான பகுதிகளில், பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது