தென்காசி : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு முழுவதும் உள்ள காவலர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புடன் நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் மூலம் ஊக்குவித்து கௌரவப்படுத்தி வருகின்றது. அரும்பணி ஆற்றும் காவல்துறையினருக்கு தகுந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதுதானே நாம் செய்கின்ற சரியான பதில்வினையாக இருக்கமுடியும்! இருளும், ஆபத்தும், வன்முறையும் அமைதியை சீர்குலைக்க முற்படுகையில் நமது உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையே தியாகம் செய்ய தயாராக, அச்சமின்றி களத்தில் இறங்குபவர்கள் நமது காவல்துறை பணியாளர்களே.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக குடியுரிமை நிருபர்களால் காவலர் தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கியும், பத்தாம் வகுப்பு அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.
ஆலங்குளம் காவல்நிலையம் அருகே நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியரும், காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அறிவுறுத்தலின்படி, காவலர் தினத்தை முன்னிட்டு, காவல்துறையினருடன் இணைந்து சமூக பணிகளை பாராட்டும் வகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் போலீஸ் நியூஸ் பிளஸ் காவலர் தின அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி, மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரத்லிங்கம், திரு.பேச்சிமுத்து மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் தென்காசி ஒருங்கிணைப்பாளர் திரு.ஜோசப் அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் திரு.ராஜா, எம். எஸ். சுப்பையா, சமூக ஆர்வலர் திரு. முருகன் உட்பட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்கள். இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை சமூக ஆர்வலர் திரு. முருகன் செய்திருந்தார்.
காவலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆலங்குளம் குடியுரிமை நிருபர்கள் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டி காவல்துறையினருக்கு இனிப்புகள் வழங்கி காவலர் தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
[embedyt] https://www.youtube.com/watch?v=r8BD0gKPhJE[/embedyt]