நேற்றைய தினத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், இன்றைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்,நாளைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்பது அறிஞர்கள் கூற்று.
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2019 ஆம் ஆண்டு மற்றுமொரு வெற்றி வருடமாகும் எப்பொழுதும் விழிப்புடனும், தொழில் திறனுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டுவரும், தமிழ்நாடு காவல்துறை 2019 ஆம் ஆண்டிலும் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
- 2019 அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் இரண்டாவது முறை சாரா இந்தோசீனா உச்சிமாநாடு வெற்றிக்காக நடந்தேறியது செயல்படுத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
- 2019 ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் 40 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் அருள்மிகு அத்திவரதர் விழாவின்போது நாடு முழுவதிலும் ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தபோது அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உலக அளவில் பெரும் பாராட்டையும் பெற்றது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததும் மிகப் பெரிய சிறப்பாகும்.
- இவ்வாண்டில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் கணினி வழிக் குற்றங்கள் கடல்சார் அமலாக்க பேரிடர் மேலாண்மை ஆகிய செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த, புதிய சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டும், தென்காசி செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய புதிய காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டும் நமது செயல்திறன் மேம்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
- 2019ஆம் ஆண்டு சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்காக இந்தியா டுடே பத்திரிகை சார்பில் மாநிலங்களில் சிறந்த மாநிலம் 2019 என்ற விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது.
- இந்திய அரசின் மத்திய உள் விவகார துறை தேனி காவல் நிலையத்தினை நாட்டிலேயே நான்காவது சிறந்த காவல் நிலையமாக தர வரிசைப் படுத்தியது.
- இதற்கெல்லாம் உச்சமாக பணியாளர் பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியத்துக்கு மத்திய அமைச்சகம் பொதுமக்கள் பாதுகாப்பினை ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டு ஆறு அளவீடுகளில் நாட்டில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் மதிப்பீடு செய்து அதில் சிறந்த நிர்வாகத்திற்காக குறியீட்டில் தமிழகத்தை முதல் மாநிலமாக அறிவித்து உள்ளது.
- பணிகளின் பொதுவான நிலைமை வீட்டுவசதி மற்றும் காவலர்களின் நலன் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நான்காவது காவல் ஆணையத்தை அமைத்து உள்ளார்கள்.
அனைத்து ஆண் மற்றும் பெண் காவலர்கள் மற்றும் அலுவலகக் அலுவலகர்கள் புகழ்மிக்க காவல்படையின் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்ளும் அதே வேளையில் காவல் பணியில் வருங்காலத்தில் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ள சிறந்த பாரம்பரியத்தையும் தரத்தையும் பராமரிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நாளை என்பது 365 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை அதில் எழுதுவோம் –பிராட் பைஸ்லி
என்று காவல் துறை இயக்குனர் திரு.திரிபாதி, IPS அவர்கள் புத்தாண்டு செய்தியாக வெளியிட்டுள்ளார்.
[embedyt] https://www.youtube.com/watch?v=fbslnrfMLJw[/embedyt]