சென்னை: 2008 நவம்பர் 26 ஆம் தேதி, மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகும். இதில் பாதுகாப்பு காவல் துறையினர் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர்.
காவலர் வீர மரணம் அடைந்த நாளை அனுசரிக்கும் விதமாகவும், வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாகவும், வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் தலைமையில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் இணைந்து பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நோய் இல்லாமல் வாழ காப்பகத்தை சுத்தமாக வைத்து கொள்ள பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள சுத்தம் செய்யும் துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் முதியோர்கள் இருக்கும், அறைக்கே சென்று, முதியவர்களுக்கு உணவு வழங்கினார். இதனை கண்ட முதியவர்கள் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்களின் பணிவை கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்த அவர்கள், அவரை மனதார வாழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தென் சென்னை பத்திரிகை செயலாளரும் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபருமான திரு.முகமது மூசா மற்றும் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.