திருநெல்வேலி: திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருகாபுரத்தை சேர்ந்த கணேசன் 52, என்பவருக்கு சொந்தமாக குருகாபுரத்தில் தோட்டம் உள்ளது. அதில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொட்டுநீர்பைப்பை வைத்திருந்தார்.
இதனை திசையன்விளை நரசங்காடை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(33), மற்றும் உவரி, வெம்மணக்குடியை சேர்ந்த அருள்ராஜ்(34), என்பவரும் சொட்டு நீர் பாசன பைப்பை திருடி சென்றதை கணேசன் என்பவரின் அக்கா மகன் பார்த்துள்ளார்.
மேற்படி கணேசன் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.லிபிபால்ராஜ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு சொட்டு நீர்பாசன பைப்பை திருடிய இருவரையும் நீதிமன்ற காவல் உட்படுத்தினார்.