சென்னை : சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.வி.விக்ரமன்,இ.கா.ப., அவர்களின் தனிப்படையினர் மற்றும் J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், இன்று (01.12.2020) மதியம், அடையாறு, இந்திராநகர், தண்ணீர் தொட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த 3 இலகுரக சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 வாகனங்களின் ஓட்டுநர்கள் 1.புஷ்பராஜ், வ/39, த/பெ.செளந்தராஜ், எண்.137, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், 2.இசக்கிமுத்து, வ/21, த/பெ.சிங்கராஜ், எண்.145, கொட்டையாம்பேட்டை, விருதுநகர் மாவட்டம், 3.செல்வராஜ், வ/27, த/பெ.பரசுராமன், எண்.5/78,வேலு நகர், மதுரவாயல், மேற்படி 3 வாகனங்களின் உரிமையாளர் 4.ராமசாமி, வ/40, த/பெ.நாகரெட்டியார், மதுரவாயல், ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 2,000 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் மற்றும் 3 இலகுரக சரக்கு வாகனங்கள் கைற்றப்பட்டது. மேற்படி நான்கு நபர்கள் மீதும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா