வேலூர் : வேலூர் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 .2021 ஆம் தேதி முகமூடி அணிந்து கொண்டு ஒரு நபர் கடையின் சுவற்றில் துளையிட்டு கடையின் உள்ளே இறங்கி சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடி சென்று விட்டார்.
இது சம்பந்தமாக வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலைய வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை கண்டுபிடிப்பதற்கு. வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.A. G. பாபு, IPS அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், IPS . (Crime intelligence) அவர்கள் மேற்பார்வையில் வேலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு.ஆல்பட் ஜான் IPS அடங்கிய 8 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
தனிப்படையினர் குற்றம் நடந்த இடத்தை கண்காணித்து தடயங்களை சேகரித்தும். சுமார் 200 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை கண்காணித்து. குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர். குற்றவாளியை பற்றி விசாரணை செய்கையில் ஏற்கனவே மிளகாய் மூட்டை திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்தபோது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து எதிரியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு குற்றவாளி பிடித்து விசாரணை செய்து திருடப்பட்ட நகைகள் அனைத்தும் புதைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து கண்டு அனைத்து நகைகளும் கைப்பற்றப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்