இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்,
திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் (01.05.2023) மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ‘நம்ம ஊரு சூப்பரு” எங்களது கிராமம் எழில் மிகு கிராமம் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்அலுவலர்திரு.இரா.கோவிந்தராஜலு அவர்கள், தலைமையேற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் நம்வீட்டையும், சுற்றுப்புறத்தையும் எவ்வாறு பாதுகாத்து சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தி சென்று நிரைவாக பேரணி அருள்மிகு திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வீதியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் உள்ள குப்பைகளை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜலு அவர்கள் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குநர் திரு.பரமசிவம் அவர்கள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திரு.புல்லாணி அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்திரு.மரகதநாதன் அவர்கள், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராஜேந்திரன் அவர்கள், திரு.கணேஷ் பாபு அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி