திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அரியன் வாயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது அதன் அடிப்படையில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் ஜெகஜீவன் ராம் தெருவில் உள்ள ஒரு குடோனில் பதிக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பொருட்கள் பத்து மூட்டைகளில் பதிக்க வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது சம்பந்தமாக தவ்லத் கான் வயது (45). ராயபுரத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி இந்த பொருட்களை கடைகளுக்கு விநியோகியம் செய்வதாக தகவல் இதன் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரி காளிராஜ் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு குட்கா பொருட்களை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு