இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபடும் படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பரமக்குடி உட்கோட்ட குற்றத் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.சுந்தர் மற்றும் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சசிக்குமார் ஆகியோர் தலைமையில் காவலர்கள் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரமக்குடி பெரிய கடை வீதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை இறக்கி கொண்டிருந்த இராமஜெயம் மற்றும் மகேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரி மற்றும் சுமார் 20 இலட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை