திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பசுமை நகர் பகுதியைச் சார்ந்த சதாசிவம் 45 ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.சதாசிவம் மனைவி சிவகாமி 33 மற்றும் அவருடைய மகன்கள் மூன்று பேர் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து சிவகாமி பந்தரபள்ளியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று உள்ளார் அதன் பின்னர் சிவகாமியின் உறவினரான சரவணன் சிவகாமியின் வீட்டு வழியாக செல்லும் போது வீட்டின் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சிவகாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் வீட்டிற்கு வந்து பார்த்த சிவகாமி கேட் மற்றும் முன் கதவு இரும்பு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிவகாமி ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மற்றும் தடவியல் நிபுணர்கள் வைத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.