சேலம் : 2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட அழகாபுரம் காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.செந்தில் குமார் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினர்.
சேலம் மாநகரம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து செல்போன் காணாமல், போவதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.மோகன், திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விரைவாக செயல்பட்டு, காணாமல் போன செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். அழகாபுரம் காவல்துறையினரை செல்போனை பெற்றுகொண்டவர்கள் வெகுவாக பாராட்டினர்.