திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி K.M.அஸ்வினி அவர்கள் மேற்பார்வையில் தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி R.தனலட்சுமி அவர்கள் தலைமையில் காவலர்கள், இனைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்புள்ள 1042 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 7 நபர்களை கைதுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான 2 நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.