திருவள்ளூர் : திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை அரைத்து பாக்கெட், பாக்கெட்டாக செய்து மீஞ்சூர், எண்ணூர், நாப்பாளையம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்களுக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இந்நிலையில், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன், காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டக்கரை பகுதியில் ஒரு வீட்டில் 2 லட்சம் மதிப்புள்ள மாவா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் அணில் (31) என்பவரை கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்