திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா குடோனில் பதுக்கி அங்கிருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் உத்தரவின்படி, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் மற்றும் போலீசார் சிங்கிலி மேடு சாலை சந்திப்பு குடோனில் சோதனை செய்தபோது சுமார் 2 லட்ச ரூபாய்மதிப்புள்ள குட்கா பொருட்களான HANS எட்டு பெரிய பெட்டிகளும் 7 பெரிய கோணிப் பையில் Hans ம் 3 சிறிய பைகளில் MDM பாக்குகளும், 3 பைகளில் Santhi Super பாக்கும் சேர்ந்து சுமார் 175 கிலோ அளவுள்ள குட்கா பொருட்கள் இறக்கி வைத்திருந்ததை பொன்னேரி உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் மற்றும் போலீஸார் கைப்பற்றினர்.
பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் யார் என்று தெரியவில்லை தப்பி ஓடிய விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர். குடோன் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி காவல்துறையினர் விரைவான செயல்பாட்டினால், குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்