சேலம் : சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (30), ரவுடியான இவர் மீது ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் கடந்த 2015, 2017, 2018-ம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்தும் தெரியவந்தது. சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36), இவர் பிரபல ரவுடியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் திரு.நஜ்முல் ஹோடா, உத்தரவிட்டார்.