கோவை: கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டி – கரையாம் பாளையம் அரசூர் மெயின் ரோட்டில் இ. எஸ் .ஏ .எப் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது .இங்கு நேற்று இரவில் கொள்ளையர்கள் 2 பேர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை இரும்பு ராடால் உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து அதன் கிளை மேலாளர் சிவசங்கர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தபோது 2 ஆசாமிகள் தங்களது முகத்தை துண்டாலும், சட்டையாலும் மூடிக்கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.