தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த வழிபறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தபுனேனி IPS, அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன், காவல் ஆய்வாளர்கள் திரு.அழகேசன், திருமதி.பேபி ,ஆகியோர்களின் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான காவலர்கள்
Ssi திரு.ராஜா, Ssi திரு.செல்வகுமார், Hc திரு.பாலசுப்பிரமணியம், Hc திரு.நாடிமுத்து, Pc திரு. ஜனார்த்தனன்.
மற்றும் கும்பகோணம் உட்கோட்ட காவலர்களுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், குற்றவாளிகள், பற்றிய தகவல்கள் சேகரித்தும் பார்த்ததில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறி வைத்து கைப்பை , தங்கச் செயின் , செல்போன் ஆகியவற்றை தொடர்ச்சியாக வழிப்பறி செய்து வந்த திருவிடைமருதூர் அம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், முருகானந்தம், மற்றும் திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கூந்தலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்,ருணாகரன் ஆகிய நபர்களைவழிப்பறி சம்பவத்தை அடுத்து இரண்டு மணி நேரத்திற்குள் மேற்படி, இரண்டு குற்றவாளிகளையும் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு விரட்டி சென்று பிடித்து மேற்படி நபர்களிடமிருந்து 7 1/2, சவரன் தங்க நகைகள், 7 விலை உயர்ந்த செல்போன்கள், வழிபறிக்கு பயன்படுத்திய இரண்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.