தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 218 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை. கடந்த (25.09.2022), அன்று சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு செவல் பகுதியைச் சேர்ந்த காசிராமன் மகன் சேதுராமன் (32), என்பவரை குடும்ப பிரச்சனை காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது உடன்பிறந்த சகோதரரான ராமநாதன் (38), என்பவரை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான ராமநாதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. இளவரசு அவர்களும், கடந்த (01.10.2022) அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள மருத்துவமனை அருகே வைத்து கோவில்பட்டி வடக்கு இலுப்பையூரணி பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் மகன் பாக்கியராஜ் (36). என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த காந்தாரிமுத்து மகன் மந்திரமூர்த்தி (28), என்பவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான மந்திரமூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு செவல் பகுதியைச் சேர்ந்த காசிராமன் மகன் 1) ராமநாதன் மற்றும் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த காந்தாரிமுத்து மகன் 2) மந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 218 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.