இராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (31) முருகன் (27) இவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகளின் காரணமாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி.தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திரு.பாஸ்கர பாண்டியன், இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்