திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகம் கெழுவத்தூர் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குமார் (எ) ராஜ்குமார் 39. என்பவரையும், மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில் தயார் செய்து விற்பனை செய்த குற்றவாளி சரவணன் 36. என்பவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் மேற்படி குற்றவாளிகள் இரண்டு பேரும்
இன்று (06.12.2021) குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திரு.விஸ்வநாதன் (மன்னார்குடி நகர காவல் நிலையம்) திரு.சிவப்பிரகாசம் (பெருகவாழ்ந்தான் காவல்நிலையம்) மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா