தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.
கடந்த 03.03.2024 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விஷ்ணு 24. மற்றும் ஒருவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான விஷ்ணு மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஷேக் அப்துல் காதர் அவர்களும்,
கடந்த 04.03.2024 அன்று தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணி நகர் ஜங்ஷன் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தட்டார்மடம், முதலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு 23. என்பவரை தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தட்டார்மடம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் திரு. யேசுராஜசேகரன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் 1) விஷ்ணு மற்றும் தட்டார்மடம், முதலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.