சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், இதன் தொடர்ச்சியாக, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், 11.06.2021 அன்று அண்ணாசாலை, எல்.ஐ.சி பில்டிங் அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது,
அங்கு கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த 1.உம்முகுல்சம், பெண்/வ/26, ஆதம்பாக்ககம் 2.பௌசானா, பெண், வ/28, கானாத்தூர் 3.ராஜேஷ், வ/21, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் 4.விவேக், வ/25, செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய 4 நபர்களை கைது செய்து,
அவர்களிடமிருந்து 8 Lipsomal – Amphotericin மருந்துகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில், பெங்களூரிலிருந்து 15,000/- ரூபாய்க்கு வாங்கி வந்து ரூ.40,000/க்கு விற்றது தெரியவந்தது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்