சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் 01.6.2021 அன்று மாலை தண்டையார்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சண்முகபிரியாவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது குறித்து சண்முகபிரியா H3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அம்மு என்பவர் 02.6.2021 அன்று தண்டையார்பேட்டை, எம்.சி.எம்.கார்டன் 1வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் வந்த ஒரு நபர் அம்முவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது குறித்து அம்மு H3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
H3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 2 சம்பவ இடங்களிலும் விசாரணை செய்து, அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்ததின்பேரில், மேற்படி ராஜு (எ) ராஜசேகர், வ/21, புது வண்ணாரப்பேட்டை மற்றும் யுவராஜ், வ/21, புது வண்ணாரப்பேட்டை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து புகார்தாரர்களின் 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.