கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 25. சைலோகார்த்தி 24. இவர்கள் இருவரும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாா் கைது செய்து அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் 4 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் திரு.ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சந்தோஷ்குமார், சைலோகார்த்தி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சட்டத்துக்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.