திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 15 வயது சிறுமியை தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் கனகராஜ் என்பவர்கள் புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து தாக்கி வந்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து தாக்கிய தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி(52) மற்றும் கனகராஜ்(57) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா