திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை இயக்குனர் திரு.ஆபாஸ் குமார் உத்தரவின் பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் திருவள்ளூர் மாவட்டம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு 36. தனசேகர் 50. ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மினி வேனையும், ரேஷன் அரிசியையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.